2021 மே 15, சனிக்கிழமை

பிளியந்தல சூடு: காயமடைந்திருந்த சிறுமி மரணம்

Menaka Mookandi   / 2017 மே 19 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிளியந்தல பிரதேசத்தில், போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்து, வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த சிறுமி, சிகிச்சை பலனின்றி, இன்று அதிகாலை 3.45 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின் போது காயமடைந்த சிறுமி, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தின் போது, பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலுமிரு பொலிஸார் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .