2021 ஜூன் 21, திங்கட்கிழமை

மக்களின் ஆணைக்கு மதிப்பளிக்குமாறு ஆளும் கட்சி கோரிக்கை

Super User   / 2010 ஏப்ரல் 11 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 8ஆம் திகதி நடைபெற்று முடிவடைந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு மக்களால் வழங்கப்பட்ட ஆணைக்கு மதிப்பளிக்குமாறு சர்வதேச சமூகத்திடம், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இன்று கோரிக்கை விடுத்தது.

இந்தத் தேர்தலின் ஊடாக மக்கள் வெளிப்படுத்திய ஆணையை பிரதிபலிக்கும் முகமாக வெளிநாட்டு சமூகங்கள் நடந்துகொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்க்கட்சிகள் கடந்தகாலங்களில் தாம் விட்ட தவறினை உணர்ந்துகொண்டு நாட்டை முன்னேற்றுவதற்கான வழிவகைகளில் ஈடுபட வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்  பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .