2021 ஓகஸ்ட் 06, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பு மாவட்டம் :அலி ஸாஹிர் மௌலானா - அமீரலி - ஹிஸ்புல்லா ; வெல்லப்போவது யார்?

Super User   / 2010 மார்ச் 21 , மு.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

EXCLUSIVE எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று முஸ்லிம் வேட்பாளர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடுகின்றார்கள். இவர்களுக்
கிடையில் கடும் போட்டி நிலவுகின்றது என அங்கிருந்து தமிழ்மிரர் இணையதளத்துக்கு கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.முன்னாள் ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும்,விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டும் வெளியேறவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகியவருமானன அலி ஸாஹிர்  மௌலானா  இம்முறை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் போட்டியிடுகின்றார்.

முன்னாள் பிரதி அமைச்சரும்,கிழக்கு  மாகாண  அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா  களமிறங்கியிருக்கின்றார்.இவர்கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக வருவார் என எதிர்பார்க்கப்பட்டவர்.

அடுதது முன்னாள்  அமைச்சர் அமீரலி.இவர் கூட வெற்றியை இலக்காகக்கொண்டு செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்.

இவர்களில்   ஒருவர்தான் தெரிவு செய்யப்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக மட்டக்களப்பிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹிஸ்புல்லாவுக்கு காத்தான்குடியிலும்,அமீரலிக்கு வாழைச்சேனை,ஒட்டமாவடி பகுதிகளிலும் பெரும்பான்மையான வாக்குகள் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.எனினும்,இவர்கள் இருவரும் முஸ்லிம் வாக்குகளை மாத்திரம் நம்பியிருக்கவேண்டிய நிலையில் உள்ளனர் என கூறப்படுகின்றது.

இம்முறை களமிறங்கியிருக்கும் அலி ஸாஹிர் மௌலானாவுக்கு வெற்றிபெறக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் அரசியல்வாதியொருவர் தமிழ்மிரர் இணையதளத்திடம் தெரிவித்தார்.

முஸ்லிம்களுடன் மாத்திரமல்லாது தமிழ் மக்களுடனும் நெருக்கமான தொடர்புகளைக்கொண்டுள்ள அலி ஸாஹிர் மௌலானா வெற்றி பெறுவது என்பது எதிர்கால கிழக்கு மாகாண அரசியலில் தமிழ்,முஸ்லிம் உறவுகளை இன்னும் பலப்படுத்தும் என்றும் அத்தமிழ் அரசியல்வாதி மேலும் தெரிவித்தார்.

இதேவேளை,ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் போட்டியிடும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரும்,முன்னாள் கிழக்கு  மாகாண சபையின் எதிர்க்கட்சித்தலைவருமான பஷீர் சேகு தாவூத் போட்டியிடுகின்றார்.இவர் வெற்றி பெறக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாகவும் மட்டக்களப்பிலிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

பஷீர் சேகு தாவூத், முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினராக தேசியப்பட்டியல் மூலம் பலமுறை தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

  Comments - 0

 • EKSAAR Sunday, 21 March 2010 05:35 PM

  அலி ஸாஹிர் மௌலானா ஏனைய இருவரை விடவும் சிறந்த தெரிவுதான் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடம் இல்லை..

  அதேவேளை ஹிஸ்புல்லாஹ் மற்றும் அலிசாஹிர் ஆகியோர் போட்டியிட செய்யப்பட்டிருப்பது, அமீரலிக்கு ஆப்பு வைக்கத்தான் என்பது இன்னுமா அவருக்கு உறைக்கவில்லை?

  Reply : 0       0

  najeeb Monday, 22 March 2010 03:42 AM

  தமிழ் முஸ்லிம் உறவு வளர மௌலான போன்ற கனவான் அரசியல் வாதிகள் வெல்ல வேண்டும்

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .