2021 ஜூன் 24, வியாழக்கிழமை

மணல் கட்டணம் 100% அதிகரிப்பு

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 22 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

மணலுக்காக அறவிடப்படும் அரச ஆதாய உரிமைக் கட்டணத்தை 100 சதவீதம் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக, புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது.  

இந்த புதிய கட்டண அறவீடானது, 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என்றும் அப்பணியகம் அறிவித்துள்ளது.  

மணல் கியூப் ஒன்றின் அரச விலையானது, தற்போது 4 ஆயிரம் ரூபாயாகும் எனக் கணிப்பிட்டு, அரச ஆதாய உரிமைக் கட்டணமாக 160 ரூபாய் அறவிடப்படுகின்றது என்று, அந்தப் பணியகத்தின் தலைவர் கித்சிறி திஸாநாயக்க தெரிவித்தார்.  

எனினும், மணல் கியூப் ஒன்றுக்காக அறவிடப்படும் அரச ஆதாய உரிமைக் கட்டணம் போதுமானது அல்ல. இக்கட்டணமானது 2007ஆம் ஆண்டே தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.  

மணல் கியூப் ஒன்றின் விலையானது 4 ஆயிரம் ரூபாவாக கணிக்கப்பட்டிருந்த போதிலும், சில பிரதேசங்கில் மணல் கியூப் ஒன்று 18 ஆயிரம் ரூபாய்க்கும் மேற்பட்ட தொகைக்கு விற்பனை செய்யப்படுவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். 

இதன்காரணமாக, அரச மணல் கியூப் ஒன்றின் விலையை 8 ஆயிரம் ரூபாய் வரையிலும் அதிகரித்து, அரச ஆதாய கட்டணமாக 320 ரூபாயாக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .