Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 மே 31 , மு.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன், மு.இராமச்சந்திரன், கு.புஸ்பராஜா, ஆர்.ரமேஸ், மொரிஸ் என்டனி
நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், நேற்று (30) ஏற்பட்ட மண்சரிவு மற்றும் கற்பாறைகள் சரிவுகளால், இதுவரையிலும் 49 குடும்பங்களைச் சேர்ந்த 428 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அக்கரப்பத்தனை-யுனிபீல்ட், ஹோல்புறூக், திம்புள்ள- பத்தனை, யுனிபீல்ட் ஆகிய இடங்களிலேயே, மண்சரிவுகளும் கற்பாறைச் சரிவு அனர்த்தங்களும் இடம்பெற்றுள்ளன.
அக்கரப்பத்தனை, யுனிபீல்ட் ஆகிய தோட்டங்களில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் கற்பாறைச் சரிவு காரணமாக, 25 குடும்பங்களைச் சேர்ந்த 170 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அக்கரப்பத்தனை, ஹோல்புறூக் நியூகொலனி பிரதேசத்தில், திங்கட்கிழமை மாலை ஏற்பட்ட மண்சரிவு மற்றும் கற்பாறை சரிவு காரணமாக 5 குடும்பங்களைச் சேர்ந்த 20 வெளியேற்றப்பட்டுள்ளனர்.
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவு, யுனிபீல்ட் தோட்டத்தில் நேற்று (30) அதிகாலை ஏற்பட்ட மண்சரிவினால், 19 குடும்பங்களைச் சேர்ந்த 150 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
நுவரெலியா, டெப்பாஸ் கிராமத்தில் மண்சரிவு அனர்த்தம் ஏற்படும் அபாயமுள்ளதால், கிராமத்திலுள்ள 84 குடும்பங்களை வெளியேறுமாறு, தேசியக் கட்டட ஆராய்ச்சி நிறுவகம் பணித்துள்ளது.
மேலும் நுவரெலியா டொப்பாஸ் முதல் இறம்பொடை வரையிலான பகுதிகளில் வாழும் மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு, நுவரெலியா இடர் முகாமைத்துவ பிரிவு அதிகாரி எம்.பண்டார தெரிவித்தார்.
ஹரிஸ்பத்துவ மகாவூவா பகுதியில் மண்சரிவு ஏற்படும் வாய்புள்ளதால் அவதானமாக இருக்குமாறு அப்பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி பொத்குல் விகாரை மலைப் பகுதியில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள மக்களை உடனடியாக வெளியேறும் படி, இரத்தினபுரி மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவினரால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
17 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
37 minute ago