2021 ஜூன் 19, சனிக்கிழமை

முன்னாள் எம்.பி சிவாஜிலிங்கம் இந்தியாவுக்குள் பிரவேசிக்கத்தடை

Super User   / 2010 ஏப்ரல் 13 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இந்திய அரசாங்கத்தினால் நாடுகடத்தப்பட்டார்.

சென்னை விமான நிலையத்தில் வைத்து இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்ட சிவாஜிலிங்கம் இன்று நள்ளிரவு நாடுதிரும்பவுள்ளார்.

இத்தகவலை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீ காந்தா டெயிலிமிரர் இணையதளத்துக்கு தெரிவித்தார்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பிலிருந்து வெளியேறி புதிதாகக்கட்சியொன்றை ஆரம்பித்த சிவாஜிலிங்கம் கடந்த ஜனாதிபதிதேர்தலில் போட்டியிட்டார்.

கடந்த டிசம்பர் மாதத்திலும் இந்திய அரசாங்கம் சிவாஜிலிங்கத்தை திருப்பி அனுப்பியிருந்தது.

இந்திய அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்களை கடந்தகாலங்களில்  சிவாஜிலிங்கம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .