2021 ஜூன் 21, திங்கட்கிழமை

மனோ கணேசனின் கட்சிக்கு தேசியப் பட்டியல் ; ஐ. தே. க வழங்குமா?

Super User   / 2010 ஏப்ரல் 20 , பி.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

EXCLUSIVE ஐக்கிய தேசியக்கட்சியுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழஙகப்படவேண்டும்.

இவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் பிரபா கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தேசியப்பட்டியல் நியமனத்தில் தமக்குரிய இடம் வழங்கப்படாவிட்டால் மாற்று நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு தமது கட்சி தள்ளப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி ஐக்கியதேசியக்கட்சியுடன் இணைந்து ஐக்கிய தேசிய முன்னணியின் யானைச்சின்னத்தில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .