2021 ஜூன் 19, சனிக்கிழமை

மனோ கணேசனின் கட்சிக்கு தேசியப் பட்டியல் ; நான் எந்தக்கருத்தும் வெளியிடவில்லை - சஜித் பிரேமதாஸ

Super User   / 2010 ஏப்ரல் 24 , பி.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவு ஐக்கிய தேசியக்கட்சியின் உயர் மட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்றது,எனவே,எந்தவித கருத்தையும் கூறமுடியாத நிலையில் நான் இருக்கின்றேன்.

இவ்வாறு ஐக்கிய தேசியக்கட்சியின் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ சற்று முன்னர் தமிழ்மிரர் இணையதளத்துக்கு தெரிவித்தார்.

மனோ கணேசனின் கட்சிக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படாமைக்கு சஜித் பிரேமதாஸ அதிருப்தி தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இதுகுறித்து,தமிழ்மிரர் இணையதளம் கேள்வி எழுப்பியது.

தாம் எந்தவித கருத்தையும் வெளியிடவில்லை என்றும் சஜித் பிரேமதாஸ தமிழ்மிரர் இணையதளத்திடம் தெரிவித்தார். 

  Comments - 0

 • xlntgson Sunday, 25 April 2010 08:49 PM

  யார் என்ன கருத்து சொன்னால் தான் என்ன? ஒன்பது இடம் தானே இருக்கிறது. புதிதாக எப்படி முளைக்கும், அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று!

  Reply : 0       0

  nuah Monday, 26 April 2010 10:08 PM

  ரணில் மனோ பேச்சு வார்த்தைகளின் பயனாக வரும் உள்ளூராட்சி தேர்தல்களில் நகர பிதா பதவிகளை தருகின்றேன் என்று எழுதிக் கொடுப்பாரோ தெரியாது!

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .