2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

அமைச்சர் மகிந்தானந்தவின் அலுவலகமாக நாவலப்பிட்டி பொலீஸ் நிலையம் - மனோ கணேசன்

Super User   / 2010 மார்ச் 07 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

ஜனநாயக மக்கள் கட்சித்தலைவர் மனோ கணேசனின் பிரசார வாகனம் சற்று முன் அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகேயின் ஆதரவாளர்களினால் நாவலப்பிட்டியில் தாக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தின்போது வாகன சாரதி யும்,இரண்டு ஆதரவாளர்களும் காயமடைந்த நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து,தமிழ்மிரர் இணையதளம் மனோ கணேசனுடன் தொடர்புகொண்டது.தாம் நாவலப்பிட்டி பொலீஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும்,எனினும்,தமக்கு பொலீஸாரிடம் நம்பிக்கை இல்லை என்றும் மனோ கணேசன் தெரிவித்தார்.

நாவலப்பிட்டி பொலீஸ் நிலையம் அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகேயின் அலுவலகமாக செயற்படுகிறது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .