2025 ஓகஸ்ட் 31, ஞாயிற்றுக்கிழமை

மாமனாரை கொன்றார் மருமகன்

Editorial   / 2024 மார்ச் 09 , பி.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

குடும்ப தகராறு காரணமாக மருமகன் , மாமனாரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக சிலாபம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.  வெள்ளிக்கிழமை (08) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மயில்குளம் பகுதியைச் சேர்ந்த 81 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையில், மருமகன் தனது மாமனாரை இவ்வாறு படுகொலை செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

 

தனது மாமனாரை கொலை செய்த மருமகன், பின்னர் சில மருந்து மாத்திரையை உட்கொண்டதாகவும், அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக சிகிச்சைக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இவ்வாறு சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சந்தேக நபரான மருமகன், அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .