2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

மியன்மாரிலுள்ள 49 இலங்கையர்களின் நிலை என்ன?

Freelancer   / 2024 ஜூன் 16 , பி.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மியன்மாரில் இணைய குற்றச்செயல்கள் இடம்பெறும் பகுதியில் 49 இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விரைவில் மீட்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் இது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.

மியன்மாருக்கான விஜயத்தை நிறைவு செய்து இலங்கைக்கு மீள திரும்பியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மியன்மாரில் இணைய குற்றச் செயல்கள் இடம்பெறும் பகுதியில் பல நாடுகளைச் சேர்ந்த சுமார் 100,000 இற்கும் அதிகமானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தமது மியன்மார் விஜயத்தின் போது தெரியவந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .