2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

’மோரா’வாக மாறிய தாழமுக்கம்

Menaka Mookandi   / 2017 மே 29 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய வங்காள விரிகுடாவின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்டிருந்த தாழமுக்கம், சுறாவளியாக மாறியுள்ளதெனவும் இதனால், இலங்கைக்கு மேலான வான்பரப்பு, கருமேகங்களால் சூழ்ந்துள்ளதெனவும் தெரிவித்த வளிமண்டலவியல் திணைக்களம், நாட்டில் கடுமையான காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் அதிகமாக இருப்பதாக, சற்றுமுன்னர் எதிர்வு கூறியது.

மேற்படி சுறாவளிக்கு, 'மோரா' என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும், அது நாட்டை விட்டு தொலைவில் பயணித்துக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்த திணைக்களம், இதனால் மத்திய மலைநாடு மற்றும் கடலோரப் பிரதேசங்களில் கடும் காற்று வீசக்கூடும் என்றும் குறிப்பிட்டது.

மேல் மாகாணம், சப்ரகமுவா, தெற்கு, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் மலையகத்தின் மேற்குச் சாய்வுப் பகுதிகள் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளுக்கு 100 மீற்றரிலும் அதிகமான மழை பெய்யும் எனவும், திணைக்களம் கூறியது.

அத்துடன், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும், திணைக்களம் மேலும் குறிப்பிட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .