2021 மே 15, சனிக்கிழமை

'மரியானா அகழி தெரிகிறது'

Kogilavani   / 2016 மார்ச் 18 , மு.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவிடம், நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு (FCID), நேற்று வியாழக்கிழமை வாக்குமூலமொன்றைப் பதிவு செய்துகொண்டது. இதற்காக, நேற்று முற்பகல் 10 மணியளவில், மேற்படி புலனாய்வுப் பிரிவுக்குச் சென்ற நாமல் ராஜபக்ஷ, நான்கு மணித்தியால விசாரணையின் பின்னர், வெளியேறினார்.   

இந்தியாவின் பிரசித்தி பெற்ற 'க்ரிஸ் குரூப்' நிறுவனத்தினால், கொழும்பு நகருக்கு மத்தியில் நிர்மாணிக்கப்படவுள்ள தொடர்மாடிக் குடியிருப்பு மற்றும் பல்பொருள் அங்காடிக்கான அனுமதியைப் பெற்றுக்கொண்டமை தொடர்பிலான கொடுக்கல் வாங்கல் குறித்தே, நாமல் ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விசாரணைக்காக, மேற்படி புலனாய்வுப் பிரிவுக்குச் சென்ற நாமல் ராஜபக்ஷ எம்.பி, அங்கிருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில், 'என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். இனி, என்னையும் வெளியில் விடுவார்களா தெரியவில்லை. இதுவும் மரியானா அகழி போன்றதே. போகிறது மட்டுமே தெரியும். வெளியே வருவது கடினம். எப்போது வருவோம் என்று தெரியாது' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .