2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

முஸ்லிம் காங்கிரஸுக்கு இந்திய அரசாங்கம் அழைப்பு விடுக்குமா?

Super User   / 2010 மார்ச் 07 , பி.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.எம்.முர்ஷிதீன்

EXCLUSIVE இலங்கை பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தகளை மேற்கொள்வதற்கு இந்திய அரசாங்கம் அழைப்பு விடுக்கவில்லை என அக்கட்சியின் செயலாளர் ஹஸன் அலி சற்று முன்னர் தமிழ் மிரர் இணையதளத்திடம் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இந்திய வெளியுறவுச்செயலாளர் நிரூபமா ராவ் பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டாரா என்பது தொடர்பாக தமிழ்மிரர் இணையதளம் ஹஸன் அலியிடம் கேள்வி எழுப்பியது.

அம்பாறையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஹஸன் அலி,நேற்று மாலை 4.30 மணியலவில் முஸ்லிம் காங்கிரஸ் தூதுக்குழு நிரூபமா ராவை சந்தித்தது என்பதை உறுதிப்படுத்தினார்.

முஸ்லிம் காங்கிரஸ் தூதுக்குழுவில் ரவூப் ஹகீம்,நிஸாம் காரியப்பர்,ஏ.எம்.பாயிஸ் ஆகியோர் இடம்பெற்றனர்.

இனப்பிரச்சினை தீர்வில் முஸ்லிம்களின் நிலைப்பாடு குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதாக ஹஸன் அலி தெரிவித்தார்.இது தொடர்பாக மேலதிக தகவல்களை பெறுவதற்காக தமிழ்மிரர் இணையதளம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீமுடன் தொடர்புகொள்ள பலமுறை முயற்சித்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .