2021 மே 13, வியாழக்கிழமை

முஸ்லிம் கட்சிகளின் ஒன்றிணைவை மழுங்கடிக்க வேண்டாம்

Editorial   / 2020 மார்ச் 13 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மௌலானா

நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடுவதற்கான முயற்சிகளை எவரும் விமர்சித்து, மழுங்கடிக்க முற்பட வேண்டாமென,  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிப் பொருளாளர் ஏ.சி.எஹியாகான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில்,  இன்று (13) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே, அவர் இவ்வாறு தெவித்தார்.

இதன்போது மேலும் கருத்துரைத்த அவர், "முஸ்லிம் சமூகத்தின் நாடாளுமன்ற பிரதிநித்துவம் குறைந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில்,  முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன ஏனைய கட்சிகளோடு சேர்ந்து, ஒரு சில விட்டுக்கொடுப்போடு ஓரணியாக போட்டியிடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அனைத்துக் கட்சிகளின் ஆதரவாளர்களிடமும் நாங்கள் விடுக்கும் வேண்டுகோள் யாதெனில், சமூகத்துக்காக  ஒன்றிணைய விரும்புவோரை கிண்டல் செய்து விமர்சிக்காதீர்கள். இதன் மூலம் ஒற்றுமைக்கான முயற்சிகளை மழுங்கடிக்காதீர்கள். உங்களுக்கு துளியளவாவது சமூகப்பற்று இருக்குமானால்,  இம்முயற்சிகளில் ஈடுபடுவோரை வாழ்த்தி,  உற்சாகப்படுத்த முன்வாருங்கள் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .