2021 ஜூன் 17, வியாழக்கிழமை

யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்களின் வாழ்க்கையில் மாற்றம் தேவை - டக்ளஸ்

Super User   / 2010 மார்ச் 22 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுத்தத்தில்  இழந்தவற்றை சீரமைத்து  மக்கள் தமது வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்கு தயாராகவேண்டும் என சமூசேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பாலையடி மற்றும் பாண்டியன்குளம் பிரதேச மக்களை   நேற்று சந்தித்து
கலந்துரையாடுகையிலேயே, அவர் இவ்வாறு கூறினார்.

இதற்கு மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு தம்மைப் பலப்படுத்த வேண்டும்
எனவும் அவர் கோரினார். இந்தப் பிரதேசங்களுக்கான் அபிவிருத்தித் திட்டங்கள் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்தார்.

அத்துடன், பொதுமக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்ட அமைச்சர்,
இதற்கான உரிய தீர்வுகள் எட்டப்படும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.

இதேவேளை,பாண்டியன்குளம் மகா வித்தியாலத்திற்கு ஒரு இலட்சத்து
50,000 ரூபா நிதியுதவியளித்தார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .