2021 ஜூன் 17, வியாழக்கிழமை

யாழ்.குடாநாட்டில் ஐ.தே.கவுக்கு ஆறு ஆசனங்கள் ; மக்கள் அமோக ஆதரவு - விஜயகலா மகேஸ்வரன்

Super User   / 2010 ஏப்ரல் 05 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

யாழ் குடாநாட்டில் மகேஸ்வரன் அணியினருக்கான ஆதரவு பெருகி வருவதாக ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் யானைச்சின்னதின் கீழ்  போட்டியிடும் முதன்மை வேட்பாளர் விஜயகலா மகேஸ்வரன் சற்று முன்னர் தமிழ்மிரர் இணையதளத்துக்கு தெரிவித்தார்.

எதிர்வரும் நாடாளுமன்றத்தில் தமது கட்சிக்கு ஆறு ஆசனங்கள் கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இன்று காலை இறுதிக்கட்ட தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள  விஜயகலா மகேஸ்வரன் தமது கணவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் செய்த பணிகளை யாழ் மக்கள் நன்றியுடன் நினைவு கூர்வதாகவும் குறிப்பிட்டார்.

கடந்த புதன் கிழமையன்று ஈபீடீபீ யினரால் தமக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்குப்பின் இதுவரை வேறு எந்த சம்பவமும் இடம்பெறவில்லை என்றும் அவர் கூறினார்.

இத்தாக்குதல் குறித்து பொலீஸில் முறைப்பாடு செய்தீர்களா என தமிழ்மிரர் கேள்வி எழுப்பியது.

பொலீஸ் முறைப்பாடு என்பது நடைமுறை சாத்தியமற்றது என்றும் அதில் தமக்கு நம்பிக்கை இல்லையென்றும் விஜயகலா மகேஸ்வரி பதிலளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .