2021 ஜூன் 19, சனிக்கிழமை

யாழ் குடாநாட்டில் கடத்தல் சம்பவம் அதிகரிப்பு;மக்கள் மத்தியில் அச்சநிலை

Super User   / 2010 ஏப்ரல் 26 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் குடாநாட்டில் அண்மைக்காலமாக சிறுவர்களைக் கடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளமையால், மக்கள் மத்தியில் அச்சநிலை தோன்றியுள்ளது.

யாழ் இணுவில் பகுதியில் இன்று காலை கடத்தல்ச் சம்பவமொன்று இடம்பெற்றிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ் குடாநாட்டில் கடந்த இரண்டு நாள்களில் இவ்வாறான நான்கு கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதுடன், யாழ் குடாநாட்டின் சங்கானை, மூளாய், அராலி, ஓட்டுமடம் ஆகிய பகுதிகளிலேயே இந்த கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .