2021 ஜூன் 21, திங்கட்கிழமை

யாழ்.சாவகச்சேரியில் கைதுசெய்யப்பட்ட மாணவரின் வீட்டு வளவுக்குள் கடத்தப்பட்ட வர்த்தகரின் மகனின் சடலம்

Super User   / 2010 மார்ச் 27 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

EXCLUSIVE
சாவகச்சேரியில் கடத்தப்பட்ட வர்த்தகரின் மகனான மாணவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என யாழ்ப்பாணத்திலிருந்து கிடைக்கும் தகவல்கள் சற்று முன்னர் தமிழ்மிரர் இணையதளத்துக்கு தெரிவித்தன.

கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்ட மூன்று மாணவர்களில் ஒருவரின் வளவுக்குள் இருந்தே காணாமற்போன மாணவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தச்செய்தியை எழுதிக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் பொலீஸார் குறிப்பிட்ட இடத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இதேவேளை,இச்சம்பவம் தொடர்பாக தமிழ்மிரர் இணையதளம் உடனடியாக பொலீஸ் ஊடகப்பேச்சாளருடன் தொடர்புகொண்டது.

தமக்கு இதுவரை தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று பொலீஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயகொடி எமக்குத்தெரிவித்தார்.

எனினும்,நாளைக்காலை மேலதிக தகவல்களை தம்மால் தரமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.    Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .