2021 ஜூன் 21, திங்கட்கிழமை

யாழ் மாவட்டத்தில் வாக்களிக்க 771,359 பேர் தகுதி

Super User   / 2010 ஏப்ரல் 07 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ் மாவட்டத்தில் நாளை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கு 771,359 பேர்  தகுதி பெற்றுள்ளனர்.

ஊர்காவற்றுறையில் 53,111 பேரும், வட்டுக்கோட்டையில் 63,991 பேரும், காங்கேசந்துறையில் 69,082 பேரும், மானிப்பாயில் 71,114 பேரும், கோப்பாயில் 65,798 பேரும், உடுப்பிட்டியில் 56,426 பேரும், பருத்தித்துறையில் 48,613 பேரும், சாவகச்சேரியில் 65,141 பேரும், நல்லூரில் 72,558 பேரும், யாழ்ப்பாணத்தில் 64,714 பேரும், கிளிநொச்சியில் 9,811 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

யாழ் குடாநாட்டில் வாக்களிப்பதற்கு என 624 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கும் அதேவேளை, இடம்பெயர்ந்த மக்களின் வாக்குகளை எண்ணுவதற்வதற்கு என ஒரு வாக்களிப்பு நிலையம் உட்பட மொத்தமாக மூன்று வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

யாழ் மாவட்டத்தில் 9 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்காக 15 அரசியற் கட்சிகளும், 12 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்க்கது.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .