2021 ஜூன் 21, திங்கட்கிழமை

ராஜகிரிய பிரதேசத்தில் பதற்ற நிலை

Super User   / 2010 மார்ச் 30 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, ராஜகிரியவில் இன்று ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரசார மேடையை அகற்றுவதற்கு பொலிஸார் முற்பட்ட வேளையில், பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவின் சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை அகற்றுவதற்கு பொலிஸார் ஆரம்பித்ததாக ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தக் கூட்டத்தை நடத்துவதற்கு தேர்தல்கள் திணைக்களத்திடம் தாம் உரியமுறையில் அனுமதி பெற்றிருந்ததாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டை அமைப்பாளர் ஷிரால் லக்திலக குறிப்பிட்டார்.

அத்துடன், பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்ட உபகரணங்களை மீண்டும் தம்மிடம் கையளிக்குமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரியிருந்தனர். இதனையடுத்து, அவர்களிடம் பொலிஸார் மீண்டும் உபகரணங்களை கையளித்தனர்.

ராஜகிரியவில் இன்று பிற்பகல் 3 மணியளவில்  கூட்டமொன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொண்டிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .