2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

ரஞ்சன் வீட்டில் பொலிஸார் சோதனை

Editorial   / 2020 ஜனவரி 04 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டில் பொலிஸார் சோதனை செய்துவருகிறார்கள்.

தனது வீட்டை சோதனையிடுவதற்கான அனுமதியோடு பொலிஸார் தனது வீட்டுக்கு வந்திருப்பதாக டுவிட் செய்துள்ள முன்னாள் பிரதி அமைச்சர், தான் எந்தவொருக் குற்றச்செயல்களிலும் ஈடுபடவில்லை எனவும்  தெரிவித்துள்ளார்.

எனினும் தான் கைது செய்யப்பட்டால் வைத்தியசாலைக்கு செல்லாது,  சிறைக்கு செல்வேனெனவும், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கஞ்சா, ஹெ​ரோயின் உள்ளிட்ட போதைப்பொருள் தனது வீட்டில் இருப்பதாகவே சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.

பொலிஸார் தொடர்ந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .