2021 ஜூன் 21, திங்கட்கிழமை

ரியாத் நகரில் பெரு மழை , வெள்ளம் : 2 பேர் பலி ; இலங்கையருக்கு பாதிப்பில்லை

Super User   / 2010 மே 04 , பி.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

சவூதி அரேபிய தலைநகர் ரியாத்தில் இடம்பெற்ற கடும் மழை,வெள்ளப்பெருக்கு ஆகியன காரணமாக இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.ஒருவர் காயமடைந்தார் என அரப் நியூஸ் ஊடகவியலாளரான எம்.சி.ரசூல்தீன் தமிழ்மிரர் இணையதளத்துக்கு சற்று முன் தெரிவித்தார்.

இச்சம்பவத்தின் போது இலங்கையர் எவருக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.

கடும்சூறாவளிக்காற்றுடன் நேற்றுப்பெய்த பெருமழையால் நகரமே ஸ்தம்பித மடைந்திருந்தது.

பாடசாலைகள்,தனியார் நிறுவனங்கள் ஆகியன இன்றும் நாளையும் மூடப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதால் விபத்துக்கள் இடம்பெற்றதாகவும் எம்.சி.ரசூல்தீன் தமிழ்மிரர் இணையதளத்துக்கு மேலும் தெரிவித்தார்.

இன்று பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுவதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மக்கள் பணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .