2021 ஜூன் 21, திங்கட்கிழமை

வாகனங்களுக்கு உரிமை கோரும் இடம்பெயர்ந்த மக்கள்-பி.எஸ்.எம் சார்ள்ஸ்

Super User   / 2010 ஏப்ரல் 27 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகந்தினி ரட்னம்

யுத்தம் காரணமாக வன்னியிலிருந்து இடம்பெயர்ந்தபோது தமது வாகனங்களை விட்டுச்சென்ற மக்கள் அதற்கு உரிமை கோரிவருவதாக வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் தெரிவித்தார்.

தமிழ்மிரர் இணையதளத்திற்கு இன்று வவுனியா அரசாங்க அதிபர்  விளக்கமளித்திருந்தார். 

இதுவரையில் சுமார் 40 பேர் தமது வாகனங்களுக்கு உரிமை கோரியிருப்பதாகவும் பி.எஸ்.எம் சார்ள்ஸ் குறிப்பிட்டார். பாதுகாப்பு அமைச்சின் சிபாரிசுடன் இடம்பெயர்ந்த மக்களின் வாகனங்களை தாம் பெற்றுக்கொடுப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த வாகனங்கள் தொடர்பிலான பட்டியலொன்று கச்சேரி மற்றும் பிரதேச செயலாளர் அலுவலங்களில் வைக்கப்பட்டிருக்கிறது.

இதேவேளை, வவுனியா, முல்லைத்தீவு மற்றும்  கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கான மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்றுவருவதாக வவுனியா அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

முகாமில் தற்போது, 75,000 இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருப்பதாகவும் மேலும் அவர் கூறினார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .