2021 ஜூன் 17, வியாழக்கிழமை

வன்னியில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி

Super User   / 2010 ஏப்ரல் 06 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

வன்னியில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியிருப்பதாக வவுனியா உதவித் தேர்தல்கள் ஆணையாளர் எஸ்.சுதாகரன் தெரிவித்துள்ளார்.

வன்னி மாவட்டத்தில் 266,975 வாக்காளர்கள் வாக்களிக்கவிருப்பதுடன், 209 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவிருப்பதாகவும் அவர் கூறினார். மன்னாரில் 85,322 வாக்காளர்களுக்கு 68 வாக்களிப்பு நிலையங்களும், முல்லைத்தீவில் 68,729 வாக்காளர்களுக்கு 50 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்படவிருப்பதாகவும் எஸ்.சுதாகரன் குறிப்பிட்டார்.

அத்துடன், புனர்வாழ்வு நிலையங்களில் 11 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவிருப்பதாகவும் எஸ்.சுதாகரன் கூறினார்.

இடம்பெயர்ந்த மக்கள் வாக்களிப்பதற்காக வவுனியா தமிழ் மகா வித்தியாலயத்தில் 34 விசேட கொத்தணி முறையிலான வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவிருப்பதாகவும் எஸ்.சுதாகரன் தெரிவித்தார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .