Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
எம். றொசாந்த் / 2017 மே 25 , பி.ப. 05:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
சபை அமர்வுகள் இடம்பெறவிருந்த வேளையில், வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள், வடமாகாண சபையின் செயற்பாடுகளை முடக்கிப் போராட்டத்தில் ஈடுபட்டமைக்கு, சபை நேற்று (25) கண்டனம் தெரிவித்தது.
கடந்த 9ஆம் திகதியன்று, வடமாகாண சபையின் அமர்வுகள் இடம்பெறவிருந்த வேளை, வடமாகாண சபைக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள முதலமைச்சர் அலுவலகம் மற்றும் மாகாண சபையின் அலுவலகம் ஆகியவற்றை மூடி, சபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளை உள்ளே விடாத வகையிலான முற்றுகைப் போராட்டமொன்றை, வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டனர்.
இதன்போது, அவைக்கு வந்த முதலமைச்சரை உள்ளே செல்லவிடாது தடுத்து, தமக்கு உடனடியான பதிலை வழங்குமாறு கோரினர். இதனால், அவைக்கு முதலமைச்சர் செல்லாது திரும்பிச் சென்றார். இச்சம்பவத்தை அடுத்து, அன்றைய சபை அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையிலேயே, இன்றைய அமர்வின்போது குறித்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
18 minute ago