Freelancer / 2024 மார்ச் 20 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாதாள உலக தலைவர்கள் ஐந்து பேர் நாட்டிலிருந்து தப்பிச் செல்வதற்காக விமான டிக்கெட்டுகள் எவ்வாறு வழங்கப்பட்டது என்பது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் இரண்டு பிரதி கட்டுப்பாட்டாளர்கள் மத்துகம ஷான் மற்றும் ஹினடயான மகேஷ் ஆகியோருக்கு போலி ஆவணங்கள் மூலம் கடவுச்சீட்டை தயாரித்த சம்பவத்துடன் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த 5 பாதாள உலக தலைவர்களில் கொஸ்கொட சுஜீ, ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகியோர் உள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதாள உலக நாடுகளுக்கான விமான டிக்கெட்டுகளை ஏற்பாடு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஊழல் அதிகாரிகள் கும்பலை அடையாளம் காண்பதற்கான விசாரணைகள் தொடர்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனின் உத்தரவின் பேரில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவின் மேற்பார்வையில் மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன. R
11 minute ago
27 minute ago
38 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
27 minute ago
38 minute ago
2 hours ago