2021 ஜூன் 21, திங்கட்கிழமை

வவுனியாவில் ஜனாதிபதி தேர்தல் பிரசாரம்

Super User   / 2010 மார்ச் 18 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியாவில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கலந்துகொள்ளவிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வன்னி மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து இந்தக் கூட்டம் நடைபெறவிருப்பதாகவும் அவர் கூறினார்.

இது இவ்வாறிருக்க, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் வீடு வீடாகச் சென்று மக்களின் ஆதரவினைத் திரட்டிவருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .