2021 ஜூன் 21, திங்கட்கிழமை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு தேசியப் பட்டியல் உறுப்புரிமை

Super User   / 2010 ஏப்ரல் 15 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசிய முன்னணியின் கீழ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு தேசியப் பட்டியல் உறுப்புரிமையைப் பெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணியின் கீழ் நாடாளுமன்ற தேசியப் பட்டியல் உறுப்பினராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளர் நாயகம் ஹஸன் அலி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்னுமொரு தேசியப்பட்டியல் உறுப்புரிமையை பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.  கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட சபீக் ரஜாப்தீன்   அல்லது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிச் செயலாளர்  நிஷாம் காரியப்பர் இதற்கு நியமிக்கப்படலாம்.

இதேவேளை, ஜனநாயக மக்கள் முன்னணிக்கும் தேசியப் பட்டியல் உறுப்புரிமை கிடைக்கும் என  எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்கு ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் அல்லது அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் என்.குமரகுருபரன் நியமிக்கப்படலாம்.

  Comments - 0

  • saurav Friday, 16 April 2010 01:14 AM

    நிசாம் காரியப்பருக்கு தேசியப்பட்டியல் வழங்குவது அவசியமற்றது
    ஏனெனில் கல்முனை தொகுதிக்கு ஏற்கனவே பா.உ . இருக்கிறார்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .