2021 ஜூன் 19, சனிக்கிழமை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடம் கொழும்பில் இன்று சந்திப்பு

Super User   / 2010 ஏப்ரல் 11 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் விசேட அதியுயர் பீடக் கூட்டம் இன்று மாலை கொழும்பில் இடம்பெறவிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹஸன் அலி இன்று தமிழ்மிரர் இணையதளத்திற்கு தெரிவித்தார்.

இக் கூட்டத்தில் வெற்றிடமாகவுள்ள கல்முனை மாநகரசபையின்  மேயர் பதவி மற்றும் கிழக்கு மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவி சம்பந்தமாகவும் முடிவெடுக்கவிருப்பதாகவும் ஹஸன் அலி கூறினார்.

கல்முனை மாநகரசபையின் மேயராக பதவி வகித்த எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் கிழக்குமாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்த பஷீர் சேகுதாவூத் ஆகிய இருவரும் ஐக்கிய தேசிய முன்னணி சார்பாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இக் கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற நியமனம் சம்பந்தமாகவும் ஆராயப்படவிருக்கிறது என தமிழ்மிரர் இணையதளத்திற்கு தெரியவந்துள்ளது.  Comments - 0

 • sirajdeen Friday, 28 May 2010 05:28 AM

  அன்புடன் என் வாழ்துக்கள்.

  Reply : 0       0

  a.nmohamed nawfal Monday, 12 April 2010 09:38 PM

  it's very great that u made decision to provide national list mp to mutur harees.

  Reply : 0       0

  xlntgson Monday, 12 April 2010 10:08 PM

  அரசுக்கு குறைவு படும் ஏழு அல்லது ஆறு இடங்களை உங்களால் வழங்க முடியுமா? ரணிலுடனான ஒப்பந்தம் அதற்கு வழி செய்கிறதா? அல்லது ஐ தே க உயர்பீடம் அதற்கான அனுமதியை வழங்குமா? அடிக்கிறது தென்றல் காற்று, ரவுப் ஹகீம் பக்கமாக! வாழ்த்துவோம் .

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .