2021 ஜூன் 19, சனிக்கிழமை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மஜீத், ரஸாக் ஆகியோர் இடைநிறுத்தம்

Super User   / 2010 ஏப்ரல் 08 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்காத கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான அப்துல் மஜீத் மற்றும் கே.எம்.ஏ.ரஸாக் ஆகியோர் தமது பதவியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவருக்கும் எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூக் ஹகீம் தீர்மானித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ்  அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் முஸ்லிம் அமைச்சருக்கு இவர்கள் இருவரும் ஆதரவளிப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .