2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

100 ஆண்கள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம்

Super User   / 2010 மார்ச் 03 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா நெலுக்குளம் தொழில்நுட்பக் கல்லூரி முகாமிலிருந்த 100 ஆண்கள் மேலதிக விசாரணைகளுக்காக கடந்த 26ஆம் திகதி பூசா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியைச் சேர்ந்த 35 பேரும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 26 பேரும், முல்லைத்தீவைச் சேர்ந்த 13 பேரும், வவுனியாவைச் சேர்ந்த 15 பேரும்,  மன்னாரைச் சேர்ந்த 7 பேரும், மட்டக்களப்பைச் சேர்ந்த 3 பேரும், திருகோணமலையச் சேர்ந்த ஒருவரும் இருப்பதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டிருப்பவர்களின்  பெயர் விபரங்களை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு யாழ் அலுவலகத்தில் பார்வையிடமுடியும் எனவும் யாழ் செய்திகள் குறிப்பிடுகின்றன.

இதேவேளை, செட்டிகுளம் மெனிக்பாம் முகாம், பம்பைமடு பெண்கள் முகாம் ஆகிய முகாம்களிலிருந்து 49 பெண்கள் மேலதிக விசாரணைகளுக்காக பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .