2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

10,000 மாணவர்களின் பரீட்சை பெறுபேறு இடைநிறுத்தம்

Super User   / 2011 மார்ச் 27 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

(லக்னா பரணமான்ன)

கடந்த வருடம் தபால் திணைக்கள அடையாள அட்டை சமர்ப்பித்து க.பொத. சாதாரணத் தர பரீட்சை எழுதிய 10,000 இற்கும் மேற்பட்ட மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தினால்இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தேசிய அடையாள  அட்டை இல்லாத நிலையில், தபால் அடையாள அட்டையை சமர்ப்பித்து இம்மாணவர்கள் பரீட்சை எழுத அனுமதிக்கப்பட்டனர். எனினும், அவர்கள் தேசிய அடையாள அட்டையின் பிரதியை சமர்ப்பித்து தமது அடையாளத்தை நிரூபிக்கும்வரை அவர்களின் பெறுபேறுகளை வெளியிடுவது இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பெறுபேறு இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாணவர்களில் அதிகமானோர் நுவரெலியா மற்றும் வடக்கில் மீள்குடியேற்றப்பட்ட இடங்களைச் சேர்ந்தவர்கள் என இலங்கை ஆசிரியர்கள் ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .