2021 ஜூன் 17, வியாழக்கிழமை

கிறிஸ்மஸ் தீவில் மோதலில் ஈடுபட்ட 11 இலங்கையருக்கு எதிராக குற்றச்சாட்டு

Super User   / 2010 ஜனவரி 21 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியா, கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் 11 இலங்கையர்களுக்கு எதிராக அவுஸ்திரேலிய பொலிஸார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அரசியல் புகலிடம் கோரி அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் இவர்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டிருந்தது. இதன்போது, 40 பேர் காயமடைந்திருந்தனர்.

21 வயது முதல் 36 வயதிற்கு இடைப்பட்டவர்களே மோதலில் ஈடுபட்டதாக அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .