2021 ஜூன் 14, திங்கட்கிழமை

இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்துக்கு ரூ.1,229 மில்லியன் நட்டம்

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 21 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கெலும் பண்டார, யொஹான் பெரேரா)

முகாமைத்துவத்தின் பலவீனம் மற்றும் சிக்கனமற்ற நடவடிக்கைகள் காரணமாக இலங்கை  சீமெந்து கூட்டுத்தாபனம் 1229 மில்லியன் ரூபா நட்டத்துக்கு உள்ளாகியிருப்பதாக நாடாளுமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.

சீமெந்து கூட்டுத்தாபனம், லங்கா சீமெந்து லிமிடெட்டில் 1083 மில்லியன் ரூபாவை முதலீடு செய்துள்ளது. இந்த முதலீட்டிலிருந்து இலாபம் எதுவும் கிடைக்கவில்லை என 2009ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

1990ஆம் ஆண்டுடன் காங்கேசந்துறை சீமெந்து தொழிற்சாலை தொழிற்படாத போதும் 72 ஊழியர்களுக்கு 17 மில்லியன் ரூபா சம்பளம் வழங்கப்பட்டு;ளது. 2006 – 2010 காலப்பகுதிக்கான திட்டமும் சரியாக அமுலாகவில்லை என இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இறக்குமதி செய்த பொருட்களை விரைந்து அகற்றாமையினால் துறைமுகத்துக்கு செலுத்தப்பட்ட தண்டப்பணம் 23 மில்லியன் ரூபா ஆகும். இன்னொரு சந்தர்ப்பத்தில் 463,637 ரூபா பெறுமதியான சீமெந்து, ஏற்றி இறக்கும்போது சேதமடைந்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுபற்றி கருத்து கூறிய சீமெந்து கூட்டுத்தாபனத்தின் தலைவர், இவ்வாறான நட்டங்கள் இனிமேல் ஏற்படாது இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகக் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .