Super User / 2010 செப்டெம்பர் 05 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(யொஹான் பெரேரா)
ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையின்போது, உத்தேச 18ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தான் ஏற்றுக் கொள்ளவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
18ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை ஐக்கிய தேசியக் கட்சி எதிர்க்கவில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்த கருத்திற்கு மறுக்கும் வகையிலேயே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியின் தூதுக்குழு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீடிக்கும் எந்த நடவடிக்கையும் ஐ.தே.க. எதிர்ப்பதாக தெரிவித்ததாக இன்று மாலை ஜெயவர்த்தன நிலையத்தில் இடம்பெற்ற உத்தேச அரசியலமைப்பு திருத்தச் சட்டத்திற்கு எதிரான கட்சிகள் மற்றும் இயக்கங்களின் இணைந்த கூட்டத்தில் உரையாற்றும் போதே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். (படப்பிடிப்பு: குஸான் பத்திராஜ) (DM)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
8 hours ago
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026