2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

அரசியல் புகலிடம் கோரிய இலங்கையர் ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேற்றம்

Super User   / 2009 ஒக்டோபர் 02 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் புகலிடம் கோரியுள்ள இலங்கையர் ஒன்பது பேரை ஆஸ்திரேலிய அரசாங்கம் பலவந்தமாக திருப்பியனுப்பவுள்ளது.

கெவின் ரத் பிரதமராகப் பதவியை பொறுப்பேற்றதன் பின்னர் அவருடைய ஆளும் தொழிற்கட்சி அரசாங்கம் முதல் தடவையாக அரசியல் புகலிடம் கோரியவர்களை பலவந்தமாக வெளியேற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த நவம்பர் மாதம் மேற்கு ஆஸ்திரேலிய பெர்த்  நகரில்  வந்திறங்கிய இவர்கள் கிறீஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டனர்.

திருப்பியனுப்பப்படவுள்ள இவர்களுக்கு இலங்கையில் எந்தவித உயிராபத்தும் ஏற்படமாட்டாது என் ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிரிஸ் இவொன்ஸ் நேற்றிரவு தெரிவித்தார்.   

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .