2021 ஜூன் 17, வியாழக்கிழமை

லாகூர் தாக்குதல்;பாகிஸ்தான் விசாரணைக்குழு இலங்கை வருகை

Super User   / 2009 ஒக்டோபர் 08 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

லாகூரில் இடம்பெற்ற இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீதான தக்குதல் குறித்து ஆராய்வதற்காக பாகிஸ்தானிய விசாரணைக்குழுவொன்று இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பாகிஸ்தானிய உள்துறை அமைச்சர் ரக்மான் மலிக் தெரிவித்துள்ளார்.

இலங்கைத்தரப்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் குறித்தும் இக்குழு ஆராயும் என்றும் அமைச்சர் மலிக் மேலும் கூறினார்.

இரண்டு நாடுகளுக்கிடையிலான தகவல் பரிமாற்றங்களின் அடிப்படையில் விசாரணைகள் வலுவானதாக அமையும் என்றும்,தேவையேற்படின் இக்குழு தமது இரண்டு வாரகால விஜயத்தை மேலும் நீடிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த மார்ச் மாதம் இடம்பெற்ற பயங்கரவாதத்தாக்குதலில் எட்டுப்பேர் கொல்லப்பட்டதோடு,இலங்கை வீரர்கள் உட்பட சுமார் 20 பேர் காயமடைந்தனர். 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .