2021 ஜூன் 16, புதன்கிழமை

இடைக்கால தமிழீழ அரசாங்கம் அமைக்க ஒஸ்லோவில் ஆராய்வு

Super User   / 2009 ஒக்டோபர் 13 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாட்டில் இயங்கும் இடைக்கால தமிழீழ அரசாங்க நிர்வாகம் ஒன்றை தெரிவு செய்வதற்கான நீதியும்,சுதந்திரமும் கொண்ட தேர்தலை நடத்துவது குறித்து, விடுதலைப்புலிகள் சார்பு ஆதரவாளர் குழுவொன்று நோர்வே தலை நகர் ஒஸ்லோவில் கூடி ஆராய்ந்தது.

இவ்வமைப்பின் ஆலோசனை குழுவினால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் புலம்பெயர்ந்த தமிழர்களால் சமர்ப்பிக்கப்பட்ட பல்வேறு பிரேரணைகள் இங்கு கலந்துரையாடப் பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
 
வெளிநாட்டில் இயங்கும் இடைக்கால தமிழீழ அரசாங்க நிர்வாகம் ஒன்றை தெரிவு செய்வதற்கான முதற்படியாக சட்டப்பேரவையொன்றுக்கான தேர்தல் நடத்தப்படவுள்ளது.

பெண்களுக்கும் பால் அடிப்படையில் சம இட ஒடுக்கீது வழங்குவது குறித்தும் இங்கு ஆராயப்பட்டதாக ஆலோசனைக்குழு மேலும் தெரிவித்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .