2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

சென்னையில் இந்திய தூதுக்குழு;தமிழக முதல்வரிடம் அறிக்கை கையளிப்பு

Super User   / 2009 ஒக்டோபர் 15 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழக அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களைக்கொண்ட இந்திய தூதுக்குழு தன்னுடைய ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு நேற்று மாலை நாடு திரும்பியது.

தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி இத்தூதுக்குழுவினரை சென்னை விமான நிலையத்துக்குச்சென்று வரவேற்றார்.

தமது விஜயம் குறித்தான பூரண அறிக்கையை திமுக,காங்கிரஸ்,விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சரிடம் கையளித்தனர்.

இதேவேளை,சுமார் இரண்டரை லட்சம் அகதிகளில் 58 ஆயிரம் பேர்வரை,இன்னும் இரண்டு வாரகாலத்துக்குள் தமது சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இந்திய தூதுக்குழுவினரிடம் உறுதியளித்துள்ளார் என்று தமிழக முதல்வர் கூறியதாக இந்து நாளிதழ் தெரிவித்துள்ளது.

ஏனையவர்கள் கட்டம் கட்டமாக அனுப்பப்படுவர் என்றும்  முதல்வர் கூறியதாக இந்து மேலும் தெரிவித்தது.

அநாதை சிறுவர்கள்,அங்கவீனமுற்றவர்கள் ஆகியோர் அரச சார்பற்ற நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படுவர் என்றும் இலங்கை அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாக கலைஞர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .