2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

சோமாலிய கடலில் கடத்தப்பட்ட சிங்கப்பூர் கப்பலில் இலங்கையர்கள்

Super User   / 2009 ஒக்டோபர் 19 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

சோமாலிய கடற்கொள்ளைக்காரர்களால் நேற்று ஏடன் வளைகுடவில்  கடத்தப்பட்ட சிங்கப்பூர் கப்பலில் இலங்கையர்களும் காணப்படுவதாக இந்திய செய்தி நிறுவனமான பிடிஐ தெரிவித்தது.

எத்தனை இலங்கையர்கள் என்று இதுவரை கூறப்படாத போதிலும்,இவர்கள் அனைவரும் கப்பலில் கடமையாற்றுபவர்கள் என்றும்,மாலுமிகள் பாதுகாப்புடன் உள்ளதாகவும் கப்பல் நிறுவனம் கூறியுள்ளது.

இக்கப்பலில் தொழில் புரியும் மாலுமிகள் இலங்கை,இந்தோனேசியா,பாகிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கடத்தப்பட்டவர்களில் இரண்டு இந்தியர்களும் கானப்படுவதாக இந்திய செய்தி நிறுவனம் மேலும் தெரிவித்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .