2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

இலங்கையிலுள்ள இந்திய கைதிகளை விடுவிக்க தமிழக அரசு கோரிக்கை

Super User   / 2009 ஒக்டோபர் 20 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை சிறைச்சாலைகளில் உள்ள இந்திய கைதிகள் குறித்து அந்நாட்டு ஜனாதிபதிமகிந்த ராஜபக்ஸவுக்கு எதுவுமே தெரியாது என தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இலங்கைசிறைச்சாலைகளில் சுமார் 40 இந்தியர்கள் கைதிகளாய் உள்ளனர்.இவர்கள் பற்றிய விவரங்கள் ஜனாதிபதியின் சகோதரர் பஸில் ராஜபக்ஸவுக்குக்கூட தெரியாது என்றும் இளங்கோவன் தெரிவித்தார்.

இதேவேளை,இந்திய அதிகாரிகள் மேற்படி சிறைக்கைதிகளின் விடுதலைக்குரிய நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என இந்திய சிறைக்கைதிகளில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

28 பேர் வெலிக்கடையிலும்,10 பேர்  நீர்கொழும்பிலும்,ஐந்து பேர் அநுராதபுரத்திலும் உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .