2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

இன்று இலங்கை தொடர்பான நகல் தீர்மானம் ஐரோப்பிய பாராளுமன்றத்தில்

Super User   / 2009 ஒக்டோபர் 22 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தொடர்பான நகல் தீர்மானம் இன்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை உடனடியாகவும்,முழுமையாக  அமுல்படுத்துமாறும் கோரும் இத்தீர்மானம் இன்று  நிறைவேற்றப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று கையளிக்கப்பட்ட  மேற்படி நகல் தீர்மானம் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்கள் மீதான விவகாரங்களில் முழுமையான  அக்கறை காட்டவேண்டும் எனக்கோருவதோடு,அதிகாரப்பகிர்வு குறித்தும் கரிசனை காட்டுமாறும் வலியுறுத்துகின்றது

.இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் சுகாதாரம்,சுத்தமான குடிநீர் வசதி,மருத்துவ வசதிகள் குறித்தும் உடனடியாகச்செயற்படுமாறும் கோரியுள்ளது. 

 


   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .