2021 ஜூன் 17, வியாழக்கிழமை

கச்சைதீவு விவகாரம்;அதிமுக தீர்மானம் நிறைவேற்றம்

Super User   / 2009 ஒக்டோபர் 29 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைத்தமிழரின் நல்வாழ்வு,கச்சைதீவை மீளவும் பெறுதல் ஆகியவற்றுக்கு சார்பான குறித்தான தீர்மானமொன்றை தமிழக எதிர்க்கட்சித்தலைவி செல்வி ஜெயலலிதா தலைமையில் அதிமுக நிறைவேற்றியுள்ளது.

இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் கௌரவத்துடனும்,சம உரிமையுடனும் நடத்தப்படவேண்டும் என்பதுடன்,கச்சை தீவை திரும்பப்பெறுவதுடன்,இலங்கை கடற்படையின் தாக்குதலிலிருந்து இந்திய மீனவர்களை பாதுகாப்பது உட்பட ஏனைய விவகாரங்கள் தொடர்பாகவும் அதிமுக பொதுச்சபை தீர்மானம் நிறைவேற்றியது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தலைமையில் இத்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக இந்திய செய்தி நிறுவனம் தெரிவித்தது.  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .