2021 ஜூன் 17, வியாழக்கிழமை

ஆஸி.கப்பலில் உள்ள இலங்கையருக்கு அனுமதி வழங்க நியூஸி.மறுப்பு

Super User   / 2009 நவம்பர் 10 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தோனேசிய கடற்பரப்பில் ஆஸ்திரேலிய கப்பலில் அரசியல் புகலிடம் கோரி தஞ்சம் புகுந்துள்ள 78 இலங்கை அகதிகளையும் அனுமதிப்பதற்கு தாம் தயார் இல்லை என நியூஸிலாந்து அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய அரசாங்கம் இது குறித்து பேச்சு நடத்திய போதும் பதில் நடவடிக்கை எடுக்க முடியாமைக்கு தாம் வருந்துவதாகவும் நியூஸிலாந்தின் குடிவரவு அமைச்சர் ஜொனதன் கோல்மன் தெரிவித்துள்ளார்.
 
மூன்று வாரங்களுக்கு முன் இந்தோனேசிய கடலில் மூழ்கடிக்கப்பட்டுக்கொண்டிருந்த படகொன்றிலிருந்து காப்பாற்றப்பட்ட அகதிகள்,இந்தோனேசியாவில் தடுத்துவைக்கப்பட்டனர்.

ஆஸ்திரேலிய கப்பலில் தங்கியுள்ள இவர்கள் எதிவரும் வெள்ளிக்கிழமைக்குள் இவர்களை வெளியேற்ற வேண்டும் என இந்தோனேசிய அரசாங்கம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .