2021 ஜூன் 17, வியாழக்கிழமை

சரத் பொன்சேக்காவுக்கு ஜேவீபீ அழைப்பு

Super User   / 2009 நவம்பர் 24 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடுவதற்கு முன்வருமாறு ஜெனரல் சரத் பொன்சேக்காவுக்கு ஜேவீபீ உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளது.

முன்னாள் இராணுவத்தளபதி ஜெனெரல் சரத் பொன்சேக்காவுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகள் மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்றதாக ஜேவீபீ நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் குறித்து ஜேவீபீ ஐக்கிய தேசிய கட்சியுடன் பேச்சுவார்த்தைகள் எதனையும் நடத்தாது என்றும் அநுர குமார திசாநாயக்க   குறிப்பிட்டார்.

இருந்தபோதிலும்,ஜேவீபீயினால் தெரிவுசெய்யப்பட்டுள்ள பொது வேட்பாளருக்கு எந்தக்கட்சியும் முன்வந்து ஆதரவு கொடுக்கலாம் இன்று அவர் மேலும் கூறினார்.    Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .