2021 ஜூன் 14, திங்கட்கிழமை

ஐ.நா குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க இலங்கை அரசு நடவடிக்கை

Super User   / 2009 டிசெம்பர் 23 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசாங்கத்தின் மீது சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டுத் தொடர்பில் கவனம் செலுத்தப்படுமென இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று ஊடகவியலாளர்களுக்கு  கருத்துத் தெரிவிக்கையில் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க  இவ்வாறு கூறினார்.

அரசாங்கத்தின் உத்தரவின் பேரிலேயே விடுதலைப்புலிகள் அமைப்பின் சிரேஷ்ட தலைவர்கள் மூவரும் இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக ஆங்கிலப் பத்திரிகையொன்றுக்கு எதிர்க்கட்சி கூட்டணிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா பேட்டியளித்திருந்தார். இதனையடுத்து, ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அரசாங்கத்திடம் விளக்கம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .