2021 ஜூன் 15, செவ்வாய்க்கிழமை

ஜனாதிபதியின் நத்தார் வாழ்த்து செய்தி

Super User   / 2009 டிசெம்பர் 25 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையிலுள்ள அனைத்து மக்களும் சகிப்புத் தன்மை மற்றும் புரிந்துணர்வுடன் புதிய உறவுக்கான பாலமொன்றை கட்டியெழுப்புவதற்கு முன்வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அழைப்பு விடுத்துள்ளார்.

நத்தார் பண்டிகையை முன்னிட்டு விடுத்திருந்த வாழ்த்துச் செய்தியிலேயே அவர்
இந்த அழைப்பை விடுத்தார்.

நாட்டில் சமாதானம் மற்றும் அமைதியையும் மீள ஏற்படுத்துமாறும் ஜனாதிபதி
குறிப்பிட்டார்.

சமாதானத்தின் இளவரசரான இயேசு கிறிஸ்து நாதரின் பிறப்பைக் உலகிலுள்ள
அனைத்து கிறிஸ்தவர்களும் கொண்டாடும் இந்த நாளில், பயங்கரவாத
அச்சுறுத்தல் இல்லாத நிலையில் இலங்கையில் நத்தார்ப் பண்டிகையை
கொண்டாடக் கிடைத்துள்ளமை  இலங்கையிலுள்ள கிறிஸ்தவர்களின்
மகிழ்ச்சிக்கு காரணமாய் அமைந்துள்ளதெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ
தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .