2021 ஜூன் 17, வியாழக்கிழமை

இலங்கையர்களின் அரசியற் புகலிடக் கோரிக்கை: அவுஸ்திரேலிய எதிர்க்கட்சி நிராகரிப்பு

Super User   / 2009 டிசெம்பர் 28 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவுஸ்திரேலியாவுக்கு அரசியற் புகலிடம் கோரிச் சென்ற இலங்கையர்களின் கோரிக்கையை அவுஸ்திரேலிய எதிர்க்கட்சிகள் இன்று நிராகரித்துள்ளன.

அவுஸ்திரேலியாவுக்கு அரசியற் புகலிடம் கோரிச் சென்ற 250 இலங்கையர்கள் கடந்த ஒக்டோபர் மாதம் இந்தோனேசியக் கடற்பரப்பில் தடுத்து
நிறுத்தப்பட்டிருந்தனர். இந்த நிலையில், இவர்கள் அவுஸ்திரேலியாவுக்கான
அரசியற் புகலிடக்  கோரிக்கையை முன்வைத்து  ஜகர்த்தாவிலுள்ள
அவுஸ்திரேலியத் தூதரகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 

எனினும், அரசியற் புகலிடம் கோரிச் சென்ற இலங்கையர்களின் கோரிக்கையை
கவனத்திற்கொள்ளாத அவுஸ்திரேலிய எதிர்க்கட்சிகள் நிராகரித்துள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .