2021 ஜூன் 21, திங்கட்கிழமை

அமெ. போர்க்குற்றச்சாட்டு ஆராய்வதற்கான காலஎல்லை நீடிப்பு

Super User   / 2009 டிசெம்பர் 29 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் அமெரிக்க இராஜங்கத் திணைக்களத்தின் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய்வதற்கான காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், இந்த குற்றச்சாட்டுக்களை  ஆராயும் குழுவினருக்கான 
காலஎல்லையை மேலும் 4 மாதங்களால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ
நீடித்திருப்பதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அறிக்கை
சமர்ப்பிப்பதற்கான காலஎல்லை இந்த மாதம் 31ஆம் திகதிவரை
விதிக்கப்பட்டிருந்தது.

இறுதிக்கட்ட யுத்தத்தில் சரணடைய வந்த விடுதலைப் புலிகள்
அமைப்பின் உறுப்பினர்களை இராணுவத்தினர் சுட்டுக்கொன்றதாக 
அண்மையில் எதிர்க்கட்சி கூட்டணிகளின் பொது வேட்பாளர் சரத்
பொன்சேகா தெரிவித்திருந்ததை அமெரிக்கா சுட்டிக்காட்டியிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .